தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாள்: 1000 பேருக்கு அன்னதானம் - அமைச்சர்கள் கே சி வீரமணி, நிலோபர் கபில்

திருப்பத்தூர்: எம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம்
எம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம்

By

Published : Jan 17, 2021, 3:39 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஏழை எளியோர் 1000 பேருக்கு இலவச வேட்டி, சேலை, தலை கவசங்கள், இனிப்புகள் ஆகியவற்றை வழங்கினர். அதைத் தொடர்ந்து ஆலங்காயம், வெள்ளக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எம்.ஜி.அர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அன்னதானம் வழங்கினர்.

இதையும் படிங்க:எம்ஜிஆர் பிறந்தநாள் - மரியாதை செலுத்திய கங்கனா

ABOUT THE AUTHOR

...view details