திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னப்வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் ஆடு, கோழிகளை வாங்கி இறைச்சிக்காக விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவரது வீட்டில் கட்டிவைக்க பட்டு இருந்த ஆடுகளை நள்ளிரவில் அங்குச் சிலரது வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துக் குதறியுள்ளது. ஏற்கனவே இதுபோன்று பலமுறை நிகழ்ந்துள்ளதால், நாய் வளர்ப்பவர்களிடம் பலமுறை நாய்களை கட்டிப்போட்டு வளர்க்குமாறு கூறியதாக ஆட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அதை நாய் வளர்ப்பவர்கள் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.