திருப்பத்தூர்: திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பல் மருத்துவராக திருவள்ளூர் பகுதியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தனது சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாவிற்காக திருப்பத்தூர் வந்துள்ள அவருக்கு நேற்று இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருப்பத்தூர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அப்போது மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஒருவர், பெண் பல் மருத்துவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பெண் பல் மருத்துவரின் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கி உள்ளனர். இதனை அடுத்து, பெண் பல் மருத்துவரின் உறவினர்கள் இந்த சம்பவம் குறித்து, திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.