திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின்கீழ் நிவாரணம் தேவைப்படுவோருக்கு உதவிகள் செய்யப்பட்டுவருகின்றன.
19,000 மனுக்களை திருப்பூர் ஆட்சியரிடம் வழங்கிய திமுகவினர் - மாவட்ட ஆட்சியரை சந்தித்த திமுகவினர்
திருப்பூர்: ஒன்றிணைவோம் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட 19 ஆயிரம் மனுக்களை திமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
இதனையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் இன்னும் 19 ஆயிரம் பேருக்கு நிவாரணம் தேவைப்படுவதாக மனுக்கள் வந்தன.
இதனை திருப்பூர் வடக்கு - தெற்கு மாவட்ட திமுக சார்பில் மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் இன்று (ஜூன் 1) மாவட்ட ஆட்சியரை சந்தித்து திமுகவினர் வழங்கினர்.
மேலும் திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பணிகளில் வெளிப்படையாக இருக்க வேண்டும், மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரத்தை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.