தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயகாந்த் பிறந்தநாள்: தேமுதிகவில் ஐக்கியமான திமுகவினர்! - DMDK Leader Vijayakanth

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 68ஆவது பிறந்தநாள் விழாவில் 20க்கும் மேற்பட்ட திமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்தனர்.

vijayakanth
vijayakanth

By

Published : Aug 25, 2020, 8:00 PM IST

Updated : Aug 25, 2020, 8:30 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் தேமுதிக சாரபில் விஜயகாந்தின் 68ஆவது பிறந்தநாள் விழா வாணியம்பாடி தேமுதிக நகரச் செயலாளர் சங்கர் தலைமையில் நியூடவுன் பகுதியில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் ஏழை- எளிய மக்கள் சுமார் 500பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழா மேடையில் முகக்கவசம் அணிந்து, தேமுதிகவினர் கொடிகளை ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

மேலும் வாணியம்பாடி நாடார் காலனி பகுதியில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி தேமுதிகவில் இணைந்தனர்.

இதையும் படிங்க:விஜயகாந்த் இனி 'கிங்' ஆக இருக்கவேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

Last Updated : Aug 25, 2020, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details