அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மலைவாழ் மக்கள்! திருப்பத்தூர்:வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட நெக்னாமலை மலைக் கிராமத்திற்கு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை எந்த வித அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பாஜகவினர் மலைக் கிராமத்தினருக்கு உதவும் வகையில் ரேஷன் பொருட்களை கிராமத்திற்கே சென்று கொடுத்துள்ளனர்.
அதாவது, பாஜகவைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களின் சொந்த பணத்தில் வேன் மூலம் நியாய விலைக்கடை விற்பனையாளர் மற்றும் ஊழியர்களுடன் ரேஷன் பொருட்களை ஏற்றிக்கொண்டு மலைக்கிராமத்திற்குச் சென்றுள்ளனர். மேலே கொண்டு சென்று அங்குள்ள மலைக்கிராம மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினர்.
அப்போது அங்கு வந்த திமுக வார்டு கவுன்சிலரின் கணவர் ரகு உட்பட திமுகவினர் ரேஷன் பொருட்கள் வழங்குவதை தடுத்து நிறுத்தி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு திமுக - பாஜகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குண்டும் குழியுமான தெருவில் நாற்று நட்டு நூதன போராட்டம்!
இந்நிலையில் அங்கு வந்த பாஜக இளைஞரணியைச் சேர்ந்த இளைஞர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
இதனால் குடும்பங்கள் ரேஷன் பொருட்கள் வாங்காமல் திரும்பிச்சென்றனர். அந்த மலைக்கிராமத்திற்கு முதல் முறையாக ரேஷன் பொருட்களை எடுத்துச் சென்ற பாஜகவினரை, திமுகவினர் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மலைக்கிராமமானது தரை மட்டத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தூரம், 1200 அடி உயரம் கொண்ட மலையாகும். இக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்று வரை அரசு செய்து தரவில்லை என ஊர் மக்கள் கூறுகின்றனர். அடிப்படை வசதி இல்லாத காரணத்தால் கல்வி, மருத்துவம், ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு வேறு ஊருக்குச் செல்லும் நிலைமை உள்ளது.
தேவைக்காக அப்பகுதி மக்கள் மலையில் இருந்து வாணியம்பாடி, வள்ளிப்பட்டு மற்றும் உள்ளிட்ட பகுதிகளுக்கு 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று வரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரவு நேரங்களில் கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சூழல் எழுந்தாலும் அல்லது உடலை கொண்டு செல்லும் நிலைமை வந்தாலும் டோலி கட்டி எடுத்துச்செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதற்கட்டமாக மண் சாலை அமைத்துக் கொடுத்துள்ளனர். பின்னர் தற்போது அங்கு சாலை அமைக்கும் முயற்சி நிர்வாக காரணங்களுக்காக கிடப்பில் போடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
75 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாத மலைவாழ் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க சென்ற பாஜகவினரிடம் திமுகவினர் வாக்குவாதம் ஏற்பட்டதால் மக்கள் ரேஷன் பொருட்களை வாங்காமல் சென்றனர்
இதையும் படிங்க:"பருத்திக்கு நியாயமான விலை இல்லை"... கண்டு கொள்ளாத கவர்மெண்ட் - விவசாயிகள் வேதனை!