தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோல்வியைத் தழுவிய கே.சி.வீரமணி: வெற்றி வாகை சூடியது திமுக!

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் கே.சி. வீரமணி தோல்வியைத் தழுவினார்: அவரை எதிர்த்துக் களம் கண்ட திமுக வேட்பாளர் வேட்பாளர் தேவராஜ் வெற்றி வாகை சூடினார்.

தோல்வியைத் தழுவிய கே.சி.வீரமணி
தோல்வியைத் தழுவிய கே.சி.வீரமணி

By

Published : May 2, 2021, 5:58 PM IST

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் பெரும்பான்மையான தொகுதியில் திமுக முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் கே.சி. வீரமணி, தன்னை எதிர்த்துக் களமிறங்கிய திமுக வேட்பாளர் தேவராஜைவிட 906 வாக்குகள் குறைவாகப் பெற்றுத் தோல்வியைத் தழுவினார்.

இதையும் படிங்க:உதித்தது உதயசூரியன்: தமிழ்நாட்டின் முகத்தை மாற்ற வேண்டியது அவசர அவசியம்

வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போது சராசரியாக 2 ஆயிரத்திற்கும் மேல் முன்னிலையில் இருந்த வீரமணி, 25 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் பின்னுக்குத் தள்ளப்பட்டார். இவர் சுமார் 87 ஆயிரத்து 118 வாக்குகள் பெற்றார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தேவராஜ் 88 ஆயிரத்து 24 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பைத் தக்கவைத்தார். 906 வாக்குகள் வித்தியாசத்தில் வீரமணி தோற்கடிக்கப்பட்டார்.

இதையும் படிங்க:'பணம் மட்டுமே வெற்றியை தீர்மானிப்பதில்லை'

ABOUT THE AUTHOR

...view details