திருப்பத்தூர்: ஆம்பூரை அடுத்த ஆலங்குப்பம் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் தேமுதிக சார்பாக மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்த எல்.கே.சுதீஷ், 'தமிழ்நாடு முழுவதும் ஒன்றியம் வாரியாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமித்து அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவும் தயாராக உள்ளோம்' என்று கூறினார்.
மனுக்களை ஸ்டாலின் பெறுவதே... குப்பையில் வீசத் தான் - சுதீஷ் திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது மக்களிடம் மனுக்களைப் பெறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 'ஆளும் கட்சியாக இருக்கும் போது திமுக எவ்வாறு மனுக்களைப் பெற்று குப்பையில் வீசியதோ, அதேபோன்று தான் ஸ்டாலின் இப்போதும் செய்வார்' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆம்பூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பியபோது 'பார்க்கலாம்' எனப் பதிலளித்து விட்டுக் கிளம்பிச் சென்றார்.