கடந்த சனிக்கிழமை வேலூர் அருகே தொரப்பாடி பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மேசைகளை உடைத்த, மாணவர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், ”வேலூர் அருகே தொரப்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சனிக்கிழமை பள்ளியில் தவறான செயலில் ஈடுபட்ட 12 மாணவர்கள் வரும் 4ஆம் தேதி வரை பள்ளிக்குச் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக இனிவரும் காலங்களில் மாதம்தோறும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். வேலூர் மாவட்டத்தில் உள்ள முடிதிருத்தும் நிலையங்களில் மாணவர்களுக்கு தவறான முறையில் முடி திருத்தம் செய்தால் கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பள்ளி மாணவர்களுக்கு தேவையான முறையில் முடிதிருத்தும் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.