திருப்பத்தூர்: இலவச வீட்டு மனைகள் வழங்க வலியுறுத்தி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நூருல்லாபேட்டை பகுதியில் ஏரி கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து 47 குடும்பத்தினர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளை கட்டி வாழ்ந்து வந்தனர். இதனால் மழைக் காலங்களில் நீர் ஏரி கால்வாய்களில் செல்ல முடியாமல், அரசு மருத்துவமனை மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த அக்டோபர் 2022ஆம் ஆண்டு, வருவாய்த் துறையினர் ஏரி கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 47 வீடுகளை அகற்றினர். இதில், வீடுகளை இழந்த 47 குடும்பங்களில் 6 பேருக்கு மட்டும் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 41 குடும்பத்தினர் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க:குமரியில் கொட்டும் மழை.. இடிந்த வீட்டிற்குள் 80 வயது முதியவருடன் தவிக்கும் குடும்பம்.. மாற்று வீடு கட்டித்தர அரசுக்கு கோரிக்கை!