திருப்பத்தூர் அடுத்த பாரண்டபள்ளி பகுதியைச் சேர்ந்த சத்யநாராயணன் மகன் தேவா(32) இவர் சுமார் 7 ஆண்டுகளாக ஆர்வோ (RO) குடிநீர் விலைக்கு வாங்கி அருந்தி வருகிறார். அதன்படி, வழக்கபோல் அதே பகுதியில் உள்ள சவுத்(42) என்பவரின் மளிகைக் கடையில் இருந்து MRV மற்றும் ஸ் AQUA என்ற பெயர் பொறித்த 2 மினரல் வாட்டர் கேன்களை வாங்கியுள்ளார். பின் அவை இரண்டிலும் புழுக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கடைக்காரரிடம் கேட்டபோது, 'எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. ஆர்வோ கம்பெனிக்காரனிடம் கேளுங்கள்' என்று தட்டிக் கழிக்கும் விதமாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து தேவா குடிநீர் கேனில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்து பேசியபோது, குடிநீர் கம்பெனிக்காரர்கள் அநாகரீகமாக மிரட்டும் பாணியில் பேசியதாக தெரியவருகிறது.
புழுக்கள் நிரம்பிய மினரல் வாட்டர் கேன்கள் எனவே, ஆதியூர் பகுதியில் இயங்கி வரும் MRV மற்றும் DS AQUA என்ற குடிநீர் கம்பெனியை மாவட்ட நிர்வாகம் சோதனை செய்து அங்கு உற்பத்தி செய்யப்படும் மினரல் வாட்டர் பொதுமக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் தன்மையுடையனவா என்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சுகாதார சீர்கேடு தரும் மினரல் வாட்டர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை இந்த விவகாரத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பொதுமக்களின் உடநலத்திற்கு கேடு விளைவிக்கும் விதமாகவும் பாதுகாப்பற்ற முறையிலும் செயல்படும் மினரல் வாட்டர் உற்பத்தி நிலையங்களில் உரிய முறையில் ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: விழுப்புரம் அருகே ஏரியில் கலக்கும் மாசு நீரால் சுகாதார சீர்கேடு; தொற்று நோய்கள் தாக்கும் அபாயம்