திருப்பத்தூர்: ஒன்றியத்திற்குட்பட்ட மற்ற பள்ளி ஊராட்சி பகுதியில் நீர்வளத்துறை சார்பாக பாம்பாற்றின் மீது தடுப்பணை கட்டுவதற்காக இடத்தை தேர்வு செய்ய வந்த அதிகாரியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடுகாட்டின் மீது சுமார் 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட சடலங்களின் எலும்புக்கூடுகளை சேகரித்து எரித்துள்ளனர். எங்களுடைய மூதாதையர்களை இனி எப்படி நாங்கள் வணங்குவோம். இந்த சம்பவம் எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே தடுப்பணையை கட்டுவதற்கான இடத்தை மாற்றி கட்ட வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாக உள்ளது என்று கூறினர்.