திருப்பத்தூர்: ஆம்பூர், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் நேற்று (செப்.19) மதியம் தனது நண்பர்களுடன் தேவலாபுரம் பகுதியிலுள்ள பாலாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆழம் அதிகமுள்ள பகுதியில் குளித்துக் கொண்டிருந்த ராகேஷ், திடீரென ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், நீண்ட நேரமாக ராகேஷைத் தேடியுள்ளனர். இருப்பினும் அவர் கிடைக்காததால், உடனடியாக இது குறித்து ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.