தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு - Deer rescued alive after falling into well near Ambur

ஆம்பூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த மானை, தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

கிணற்றில் தவறி விழுந்தது மான்-2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்தது மான்-2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

By

Published : May 20, 2022, 10:40 AM IST

Updated : May 20, 2022, 11:18 AM IST

திருப்பத்தூர்:ஆம்பூர் அருகே சோமலாபுரம் ஊராட்சி சின்ன கொமேஸ்வரம் பகுதியில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த ஆண் மான் விழுந்துள்ளது. உடனடியாக அப்பகுதி மக்கள் மானை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் பலன் அளிக்காததால் ஆம்பூர் தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் கிணற்றில் இறங்கினர்.

பின்பு கயிறு கட்டி 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மானை மீட்டனர். பின்னர் மானை பத்திரமாக கொண்டு சென்று ஆம்பூர் காப்பு காட்டுப்பகுதியில் விட்டனர். கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்ட தீயணைப்பு மற்றும் வனத்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

மான் உயிருடன் மீட்பு

இதையும் படிங்க:viral video: சாவகாசமாக வாக்கிங் போகும் விலங்குகள்!

Last Updated : May 20, 2022, 11:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details