திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் தனது நிலத்திற்கு சென்றபோது அங்கே புதர் பகுதியில் மான் ஒன்று கன்றுவை ஈன்ற நிலையில் உயிரிழந்திருப்பதை கண்டு ஊர் மக்களுக்கு தகவல் அளித்தார்.
கன்றுவை ஈன்ற முடியாமல் தவித்த மான் உயிரிழந்த சோகம்! - Tirupattur news
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே கன்றுவை ஈன்ற முடியாமல் மான் துடிதுடித்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மான்
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வனத்துறையினர் சென்றனர். அங்கு, மான் தனது கன்றை ஈன்ற முயன்றபோது கன்றுவின் இரண்டு கால்கள் மட்டுமே வெளிவந்த நிலையில், உயிரிழந்து கிடந்தது. பின்னர் மானின் உடலை மீட்டு மேல்வழித்துணையாங்குப்பம் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர்.
இதையும் படிங்க:கொத்தடிமைகளாக இருந்த 200-க்கும் மேற்பட்ட ஒடிசாவினர் மீட்பு!