திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சந்தப்பேட்டை மசூதி பகுதியை சேர்ந்தவர் பள்ளிவாசல் இமாம் ஹபிபூர் ரஹ்மான் (39). இவர் ஜூலை 3 ஆம் தேதி மூச்சுத்திணறல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் முதல் உயிரிழப்பு - கரோனா நோய் தொற்றால் இறந்தோரின் எண்ணிக்கை
திருப்பத்தூர்: ஆம்பூரில் கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பள்ளிவாசல் இமாம் உடலை வருவாய்த்துறை, காவல்துறையினர் முன்னிலையில் த.மு.மு.க வினர் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்தனர்.
![திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் முதல் உயிரிழப்பு முதல் உயிரிழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:50:33:1594394433-tn-tpt-06-coroners-body-buried-vis-scr-pic-tn10018-10072020185108-1007f-1594387268-297.jpg)
அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்துள்ளனர். ஜூலை 7 ஆம் தேதி வந்த பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ( ஜூலை 9) இரவு 10 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை நகராட்சி ஆணையாளர் சௌந்தரராஜன், வட்டாட்சியர் பத்மநாபன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், காவல்துறையினர் தலைமையில் த. மு. மு.க வினர் சுண்ணாம்புக்காளை பகுதியிலுள்ள பள்ளிவாசல் மைதானத்தில் அடக்கம் செய்தனர்.
பின்னர் நகராட்சி சார்பில் அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் மண்டை உடைப்பு!