தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் மணல் கொள்ளையைத் தடுத்த அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்.. போலீசார் தீவிர நடவடிக்கை! - Vaniyambadi

Tirupathur: திருப்பத்தூரில் மணல் கொள்ளையைத் தடுத்த அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்துள்ளார்.

போலீசார் தீவிர நடவடிக்கை
திருப்பத்தூரில் மணல் கொள்ளையை தடுத்த அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 12:13 PM IST

திருப்பத்தூரில் மணல் கொள்ளையை தடுத்த அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்

திருப்பத்தூர்:வாணியம்பாடியில் கள்ளத்தனமாக மணல் கடத்தியவர்களிடம் ஜே.சி.பி இயந்திரத்தை பறிமுதல் செய்த வட்டாச்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை, வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், ஆதி திராவிடர் சமுதாய மக்களுக்கு வீட்டு மனை பட்டா அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதி திராவிடர் வீட்டுமனை பட்டாவில், சிலர் திருட்டுத்தனமாக மணல் கடத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், வீட்டுமனை பட்டா உள்ள இடங்களில் வாணியம்பாடி வட்டாச்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் செய்த ஆய்வில், துரையேறி பகுதியைச் சேர்ந்த அன்பரசன், ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:'மதுரைவீரன் உண்மை வரலாறு' புத்தக விவகாரம்; தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு!

இதனையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி ஜே.சி.பி இயந்திரத்தை வட்டாச்சியர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், அன்பரசனின் சகோதரர் சிவக்குமார் ஜே.சி.பி இயந்திரத்தை பறிமுதல் செய்த வட்டாச்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், தேவஸ்தானம் கிராம நிர்வாக அலுவலர், இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கள்ளத்தனமாக மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி இயந்திரத்தை பறிமுதல் செய்து, காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து, வட்டாச்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த சிவக்குமார் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:அண்ணாமலையார் கோயிலில் 6ஆம் நாள் கார்த்திகை தீபத் திருவிழா; வெள்ளித் தேரில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள்!

ABOUT THE AUTHOR

...view details