திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வேளாண் சட்டத்திற்கு எதிராக சாலையின் நடுவே படுத்து போராட்டம் - Tirupattur district news
திருப்பத்தூர்: வேளாண் சட்டத்திற்கு எதிராக சாலையின் நடுவே படுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக நடுரோட்டில் படுத்து போராட்டம்...
தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையின் நடுவே படுத்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.