தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டு வெடிகுண்டை கடித்த பசுவிற்கு காயம்! - திருப்பத்தூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு மாடு காயம்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டை கடித்த பசுவின் வாய் கிழிந்த நிலையில் நாட்டு வெடிகுண்டு வைத்த சமூக விரோதிகளை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.

நாட்டு வெடிகுண்டை கடித்த பசுவிற்கு காயம்
நாட்டு வெடிகுண்டை கடித்த பசுவிற்கு காயம்

By

Published : May 29, 2020, 2:01 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவர் அப்பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் மூன்று பசுக்களை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பசுக்களை சுட்டகுண்டா காப்புக்காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்பிவைத்துள்ளார். பின்னர் இரவு நெடுநேரம் ஆகியும் ஒரு பசு மட்டும் வீடு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த ராஜாமணி, காட்டுப்பகுதிக்குள் பசுவைத் தேடிச் சென்றார்.

அப்போது சமூக விரோதிகள் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்துள்ளனர். அதனை தெரியாமல் கடித்த பசுவின் வாய் பகுதி கிழிந்து, மயங்கியுள்ளது. இதனைக் கண்ட ராஜாமணி, அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

இது குறித்து தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள், பசுவிற்கு தகுந்த சிகிச்சையளித்து வருகின்றனர். வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை வைத்த சமூக விரோதிகளை வனத்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details