தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாய் துரத்தி பசு மாடு கிணற்றில் விழுந்து உயிரிழப்பு - Cow died

திருப்பத்தூர்: குனிச்சி மோட்டூர் பகுதியில் நாய் துரத்தியதால் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் பசு மாடு விழுந்து உயிரிழந்தது. பின்னர் பசு மாட்டின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

cow fell into the well and died
cow fell into the well and died

By

Published : Aug 28, 2020, 2:40 PM IST

திருப்பத்தூர் அடுத்த குனிச்சி மோட்டூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பெருமாள் (50). சில மாதங்களுக்கு முன்பு இவர் 50 ஆயிரம் மதிப்புள்ள பசு மாடு ஒன்றை வாங்கி வாழ்வாதாரமாக பால் கறந்து விற்று தன்னுடைய குடும்பத்தை நடத்தி வந்தார். இவருக்கு சொந்தமான 100 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது நாய் துரத்தியதால், பசு மாடு மிரண்டுபோய் தவறி கிணற்றில் விழுந்துவிட்டது.

பசு மாட்டை மீட்க அப்பகுதி பொதுமக்கள் போராடினர், முடியாமல் போகவே திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த நிலையில் பசு மாட்டை மீட்டனர். பசுமாடு உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

cow fell into the well and died

ABOUT THE AUTHOR

...view details