தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கரோனா

திருப்பத்தூர்: ஆம்பூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

Government officer corona attack
Tirupattur corona virus cases

By

Published : Jun 2, 2020, 8:26 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடாம்பூர் பகுதியை சேர்ந்த ஒருவர் நறியம்பட்டு அரசு அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார், அவருடைய குடும்ப உறுப்பினர்களுடன் மே 31ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 01) அவர் உட்பட அவருடைய குடும்பத்தில் உள்ள இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 5 பேரும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர் பணிபுரிந்த நரியம்பட்டு அலுவலகம், ஆம்பூரில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலை, அவர் வசிக்கும் பகுதி ஆகியவை கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று ஏற்பட்ட மற்றொருவர் பணிபுரிந்த தொழிற்சாலையை 2 நாட்களுக்கு அடைத்துவைக்குமாறு தொழிற்சாலை நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 20 தினங்களுக்கு முன்பு இவருடைய வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்னை திருவொற்றியூரில் இருந்து அவருடைய உறவினர்கள் 2 முறை வந்து சென்றதால் தொற்று பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஊராட்சி பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் குறைவாக உள்ளதால் ஆம்பூர் நகராட்சி பகுதியில் இருந்து தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு கிருமி நாசினி தெளித்து சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டதில் ஏற்கனவே 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதில் 4 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details