தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூரில் வேகமெடுக்கும் கரோனா தொற்று! - திருபத்தூர் செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் மீண்டும் கரோனா தொற்று வேகமாக அதிகுறித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில், பள்ளி மாணவன் உட்பட 7 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆம்பூரில் கரோனா தொற்று
ஆம்பூரில் வேகமெடுக்கும் கரோனா தொற்று

By

Published : Mar 16, 2021, 4:51 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூரில் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக யருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பாடதிருந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், 12ஆம் வகுப்பு பயிலும் மாணவனுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. பின் அந்த மாணவன் குணமடைந்து வீடு திரும்பினான்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களில், ஆம்பூரை சுற்றியுள்ள உமராபாத் மற்றும் கைலாசகிரி பகுதியில் மூன்று பேருக்கும், சாமியார் மடம் பகுதியில் ஓர் பெண்ணிற்கும், ஆம்பூர் நகர் பகுதியில் 3 பேர் என இதுவரை 7 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஆம்பூர் பகுதியில் கரோனா தாக்கம் அதிகரிக்கும் நிலையில், பொதுமக்கள், முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை பின்பற்றுமாறு ஆம்பூர் நகராட்சி மற்றும் சுகாதார துறையினர் அறிவுறித்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெட்ரோலிய பொருள்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் எதுவும் இல்லை: நிர்மலா சீதாராமன்

ABOUT THE AUTHOR

...view details