திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இதுவரை 15-க்கும் மேற்ப்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் , இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் வாணியம்பாடியில் உள்ள வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரோனா தடுப்பு நடவடிக்கை: வாணியம்பாடியில் கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்! - தமிழ்நாடு கரோனா செய்திகள்
திருப்பத்தூர்: வாணியம்பாடி கோட்டாச்சியர் அலுவலகத்தில் வணிகர்களுக்கான கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியர், வாணியம்பாடியின் முக்கிய பகுதியான பெரியப்பேட்டை பகுதியில் அதிக கரோனா தொற்று உள்ளது. அப்பகுதி வாணியம்பாடி வணிகத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், அங்குள்ள வணிகர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், இந்த காலகட்டத்தில் வணிகர்கள் லாபநோக்கை கருத்தில் கொள்ளாமல், மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் வட்டாச்சியர், காவல்துறையினர், சுகாதார துறையினர் மற்றும் வணிகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.