தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்புகளை நீக்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டம் - கரோனா நோய்தொற்று

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை நீக்க வலியுறுத்தி, அப்பகுதி பொது மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

By

Published : Jul 20, 2020, 8:03 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெரிய பேட்டை, செண்ணாம்பேட்டை பகுதிகளுக்கு உட்பட்ட 3 வார்டுகளில் 27 நாட்களாக தொடர்ந்து, சுமார் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் 42 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனியார் கட்டடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர்.

வாணியம்பாடியில், அதிக தொற்றுக் கண்டறியப்பட்ட பெரிய பேட்டை, சென்னாம் பேட்டை, பகுதிகளை கடந்த 27 நாட்களாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட 42 பேரில் 41 பேர் பூரண குணமடைந்து அவர்களையும் தனியார் கட்டடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தொழிற்சாலைகளுக்குப் பணிக்குச் சென்று தங்களுடைய குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 27 நாட்களாக அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், அப்பகுதி மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும் பல்வேறு நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெற்ற அப்பகுதி மக்களை, நிதி நிறுவனத்தினர் கடனை உடனடியாக திரும்பச் செலுத்துமாறு அச்சுறுத்தி வருவதாகவும், இன்னும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தடுப்புகளை நீக்கக் கோரி அந்தப் பகுதிக்கு செல்லும் நுழைவாயிலில் அமர்ந்து அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் சிவப்பிரகாசம், காவல் துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பொது மக்களிடம் அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நாளை( ஜூலை 21) முதல் தடுப்புகளை திறந்து விடுவதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details