தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரஸ்: 5 பேர் குணமாகி வீடு திரும்பினர் - வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

திருப்பத்தூர்: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஐந்து பேர் குணமாகி வீடு திரும்பினர்.

Corona virus in vellore
Corona virus five positive cases discharged in vellore

By

Published : Apr 28, 2020, 3:20 PM IST

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த மொத்தம் 79 பேர் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே 58 பேர் குணமாகி வீடு திரும்பிய நிலையில் இன்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 பெண்கள் குணமாகி இன்று வீடு திரும்பினர்.

5 பேர் குணமாகி வீடு திரும்பினர்

இவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், எஸ்.பி பிரவேஷ்குமார், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி, மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் பழக்கூடை கொடுத்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:காவலர்களின் உழைப்பை உணர்த்தும் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details