தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞரை சந்தித்த 18 பேர் தனிமை! - திருப்பத்தூரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞரை பார்த்து வந்த 18 பேர் தனிமை

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே கரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞரை பார்த்து விட்டு வீடு திரும்பிய உறவினர்கள் 18 பேரின் கையில் சீல் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட உறவினர்கள்
தனிமைப்படுத்தப்பட்ட உறவினர்கள்

By

Published : Mar 27, 2020, 7:58 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், முகமதுபுரா மசூதி முதல் தெருவில் வசித்து வருபவர் சுன்னத் அகமது(46). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் வசித்து வரும் உறவினர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதை அறியாமல் தனது குடும்பத்தினர் 18 பேருடன் சென்று பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதையறிந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவரது உறவினர்கள் 18 பேரை தனிமைப்படுத்தி, கையில் சீல் வைக்கப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்ட உறவினர்கள்

மேலும், அவர்களுக்கு ஆறுதல் அளித்த ஆட்சியர், பாதிப்பு ஏதேனும் இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறவேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள வீதிகளில் நகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.

இதையும் படிங்க: அரியலூரில் பெண் ஒருவருக்கு கரோனா உறுதி!

ABOUT THE AUTHOR

...view details