திருப்பத்தூர்: கரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க, வாணியம்பாடியில் இயங்கிக்கொண்டிருந்த உழவர் சந்தை நியூ டவுன் பகுதில் உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான மைதானத்தில் கடந்த ஒரு மாதமாக இயங்கிவந்தது.
உழவர் சந்தையில் கூட்ட நெரிசலை தவிர்க்க வேளாண்துறை சார்பில் 150 வாகனங்கள் மூலம் நகர, கிராம புறங்களில் வீடு வீடாக காய்கறி விற்கபடுகிறது. இதனால், சில்லறை விற்பனைக்கு அனுமதி இல்லை. வியாபாரிகளுக்கு மட்டுமே விற்பனை என்று அறிவித்த பின்னும் சந்தைக்கு பொதுமக்களின் வருகை அதிகரித்துவந்தது.
இதனால் கரோனா தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சில்லறை விற்பனைக்கு வரும் பொதுமக்கள் வருகையை தவிர்க்கவும், கரோனா தொற்று பரவலை தவிர்க்கும் வகையில் நியூ டவுன் மைதானத்தில் இயங்கி வந்த உழவர் சந்தை சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி வளாகத்திற்கு மாற்றம் செய்ய ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.