தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பரவல் தடுப்புப் பணி - தூய்மைப் பணியில் ஈடுபட்ட 300 பணியாளர்கள் - கரோனா எண்ணிக்கை

திருப்பத்தூர் : வாணியம்பாடியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நகராட்சி சார்பில் 300 தூய்மைப் பணியாளர்கள், தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.

கரோனா பரவல் தடுப்பு பணி: தூய்மைப் பணியில் ஈடுபட்ட 300 பணியாளர்கள்!
Thiruppathur corona prevention

By

Published : Sep 6, 2020, 11:13 AM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் சிவனருள் மாநகராட்சிக்கு பல அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

அதன் பேரில், நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன் தலைமையில், நகராட்சிப் பணியாளர்கள் 300 பேர் ஒன்று சேர்ந்து, 28ஆவது வார்டுக்குட்பட்ட பெருமாள் பேட்டை பகுதியில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும், அப்பகுதி முழுவதிலுமுள்ள பத்துக்கும் மேற்பட்ட வீதிகளில் கிருமி நாசினி தெளித்தல், கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல், வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையிலான மருத்துவக் குழுவினர் அப்பகுதி முழுவதிலுமுள்ள பொது மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details