கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி பிக்பாக்கெட், தகராறு உள்ளிட்ட சிறுசிறு வழங்குகளில் கைது செய்யப்பட்ட கைதிகள் பெரும்பாலான மாவட்டங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவருகின்றனர். அதைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட சிறை கைதிகள் மற்றும் கிளைசிறை கைதிகள் என மொத்தம் 185 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கரோனா பரவல்: சிறைச்சாலைகளிலிருந்து 185 கைதிகள் விடுவிப்பு - திருப்பூர் மாவட்டச் செய்திகள்
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருப்பூர் மாவட்ட சிறை, கிளைச்சிறைகளிலிருந்து 185 கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
![கரோனா பரவல்: சிறைச்சாலைகளிலிருந்து 185 கைதிகள் விடுவிப்பு thiruppur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6541312-thumbnail-3x2-l.jpg)
thiruppur
திருப்பூர் மாவட்ட சிறை
அவர்கள் அனைவரும் ஏப்ரல் 14ஆம் தேதி தங்களது பகுதிகளில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 17ஆம் தேதியிலிருந்து சிறை கைதிகளை பார்க்க உறவினர்கள், வழக்குரைஞர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:கரோனா எதிரொலி: பிரேசிலில் 1,500 கைதிகள் தப்பியோட்டம்!