நாடு முழுவதும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடைவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறிய 700 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 730 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் 931 காவலர்களை கொண்டு 48 வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 33 முக்கியச் சாலைகளில் ரோந்து பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனிடையே திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி நகரப் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், மளிகை பொருள்கள் விற்பனை செய்வதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.