தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில் தீவிரப்படுத்தப்படும் கரோனா தடுப்பு பணிகள் - திருப்பத்தூர்

திருப்பத்தூர்: கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து நகராட்சி மற்றும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வாணியம்பாடியில் தீவிரப்படுத்தப்படும் கரோனா தடுப்பு பணிகள்
வாணியம்பாடியில் தீவிரப்படுத்தப்படும் கரோனா தடுப்பு பணிகள்

By

Published : Apr 10, 2021, 11:02 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 1163 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 1147 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 17 பேர் வாணியம்பாடி மற்றும் வேலூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சி சார்பில் நகராட்சி சுகாதார அலுவலர் கணேஷ் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில், நகர பகுதிகளில் தீவிர கரோனா தடுப்பு பணிகளான, கிருமி நாசினி தெளித்தல், அறிகுறி உள்ள நபர்களுக்கு கரோனா பரிசோதனை, கபசுர குடிநீர் வழங்குதல், முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் வாணியம்பாடி நகராட்சி மற்றும் நகை அடகு வியாபாரிகள் சங்கம் சார்பில் இந்து மேல்நிலைப் பள்ளியில் 40 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நகராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர் அருள், களப்பணி உதவியாளர் சரவணன் உட்பட நகராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:கரோனா கட்டுப்பாடுகள் இன்றுமுதல் நடைமுறை

ABOUT THE AUTHOR

...view details