திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக மேலும் 68 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 573ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மாவட்டத்தில் இதுவரை மூன்றாயிரத்து 849 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிய நிலையில், சிகிச்சைப் பலனின்றி 85 பேர் உயிரிழந்துள்ளனர்.