திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்.25) மேலும் 67 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மாவட்டத்தில் 3,950 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சை பலனின்றி இதுவரை மாவட்டத்தில் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.