தமிழ்நாட்டில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள 14 மண்டலங்களாக பிரித்து, அதில் 4 மாவட்டத்திற்கு ஒரு சிறப்பு அலுவலரை நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி திருப்பத்தூரில் மாவட்ட சிறப்பு அலுவலர் மங்கத் சர்மா கரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "கரோனோ தடுப்புப் பணியில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் திருப்பத்தூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான வருவாய்த் துறை, சுகாதாரத்துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் சிறப்பாக வேலை செய்து வருகின்றனர். இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஒருவர் கூட இல்லை" எனத் தெரிவித்தார்.