திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆக.20) புதியதாக மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது. இம்மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,299ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 1,752 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருப்பத்தூரில் புதிதாக 84 பேருக்கு கரோனா பாதிப்பு - கரோனா பரிசோதனை
திருப்பத்தூர்: இன்று ஒரே நாளில் (ஆக. 20) மேலும் 84 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,299ஆக உயர்ந்துள்ளது.
![திருப்பத்தூரில் புதிதாக 84 பேருக்கு கரோனா பாதிப்பு Corona infection for 84 people in tirupattur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-no-qurantine-for-covid-19-negative-2008newsroom-1597930571-503.jpg)
Corona infection for 84 people in tirupattur
மாவட்டத்தில் 47 ஆயிரத்து 918 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 2,097 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். அதே சமயம் 3,795 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.