தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று (ஜூலை 13) ஒரே நாளில் 4 ஆயிரத்து 328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மேலும் 16 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 431ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.