தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் மேலும் 47 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா தடுப்பூசி

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 47 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 564ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூரில் மேலும் 47 பேருக்கு கரோனா உறுதி!
திருப்பத்தூரில் மேலும் 47 பேருக்கு கரோனா உறுதி!

By

Published : Jul 20, 2020, 12:37 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் நேற்று (ஜூலை19) ஒரே நாளில் 4 ஆயிரத்து 979 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 693ஆக அதிகரித்துள்ளது.

இதன் ஒருபகுதியாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 564ஆக அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 355 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரையில் மாவட்டத்தில் 24,650 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதில் 987 பேர் முடிவுக்காக காத்திருப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details