தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் திமுக எம் எல் ஏவுக்கு கரோனா! - Vellore District News

வேலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக எம் எல் ஏ கார்த்திகேயன்
திமுக எம் எல் ஏ கார்த்திகேயன்

By

Published : Jul 20, 2020, 1:31 AM IST

வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன். இவர் வேலூர் மாநகராட்சியின் முதல் மேயராக பணியாற்றியவர். மேலும் இவர் திமுகவின் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார்.

இந்நிலையில் பொதுமக்களின் மனுக்களை நேரில் சென்று பெற்று வந்துள்ளார். இதனால் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இவர் கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் அவதிபட்டு வந்த நிலையில் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தார்.

நேற்று அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட உள்ளது.

இதையும் படிங்க:'பிளாஸ்மா தானம் கொடுக்க வருவோருக்கு அரசு சலுகைகள் தருக!' - வலுத்துவரும் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details