தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் மேலும் 37 பேருக்கு கரோனா - கரோனா உயிரிழப்பு

திருப்பத்தூர்: மாவட்டத்தில் இன்று (ஆக. 11) புதிதாக 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,726ஆக உயர்ந்துள்ளது.

Corona for 37 more in Tirupattur
Corona for 37 more in Tirupattur

By

Published : Aug 11, 2020, 11:06 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 834 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 37 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,726ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,135ஆகவும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33ஆகவும் உள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 37 ஆயிரத்து 332 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 1,671 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். லேசான அறிகுறிகளுடன் உள்ள 3,950 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details