தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் மேலும் 20 பேருக்கு கரோனா உறுதி! - Thirupaththur dist news

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை அம்மாவட்டத்தில் 478ஆக அதிகரித்துள்ளது.

Corona confirmed for 20 more people in Tirupati district today!
Corona confirmed for 20 more people in Tirupati district today!

By

Published : Jul 16, 2020, 1:40 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் முழுவதும் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 496 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 478ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் இதுவரை 23,203 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 880 பேர் முடிவுக்காக காத்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details