தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் ஐந்தாயிரத்தை தாண்டுகிறது. வைரஸ் தடுப்புப் பணியில் மாநில அரசு தீவிரமாகத் களமிறங்கியுள்ளது.
திருப்பத்தூரில் 3 ஆயிரத்து 783 பேருக்கு கரோனா பாதிப்பு! - corona count tirupathur
திருப்பத்தூர்: இன்று மட்டும் 82 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்திலும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று மட்டும் 82 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து 3,191 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 73ஆக உள்ளது.
மேலும், இதுவரை மாவட்டத்தில் 68,599 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1867 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். இதுமட்டுமின்றி 3,680 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.