திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அக்ரகாரம் பகுதியில் செயல்பட்டுவரும் அரசினர் பல்வகை தொழில்நுட்ப கல்லூரியில் மீண்டும் இரண்டாவது முறையாக சித்த மருத்துவ மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வுமேற்கொண்டார்.
இதையடுத்து பேசிய மாவட்ட ஆட்சியர், ”திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாவது கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் முழு அளவில் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் தொற்றுப் பரவாமல் தடுக்க மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஊராட்சிகளில் உள்ள பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த முறை கரோனா தொற்று பாதிக்கப்பட்டபோது, மாவட்டத்தில் தொடங்கப்பட்ட சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் 625 பேர் சிகிச்சைப் பெற்று குணமடைந்தனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது சித்த மருத்துவ மையம் மீண்டும் அக்ரகாரம் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சித்த மருத்துவ மையங்கள் தொடங்கப்படவுள்ளன. இந்த மையங்களில் கரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்படும்” எனக் கூறினார்.
மேலும் ஒவ்வொரு சித்த மருத்துவ மையமும் இயற்கை நிறைந்த சூழலில் அமைக்கப்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த் துறை தங்கையா பாண்டியன், சித்த மருத்துவர் விக்ரம், சித்த மூலிகை மருத்துவர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூரில் சித்த மருத்துவ மையம் மீண்டும் தொடக்கம் - thirupattu ayrvadic ward open
திருப்பத்தூர்: சித்த மருத்துவ மையம் மீண்டும் அக்ரகாரம் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதனை மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார்.
Corona ayrvadic ward open in thirupattur
இதையும் படிங்க: திருமழிசையில் பிரியாணிக்காக பெட்ரோல் பாட்டில் வீச்சு!