திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட நாயக்கனேரி ஊராட்சி ஒன்றியத்தில் வரும் 9 ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட பனங்காட்டேரி பகுதியில் உள்ள வார்டு எண் 9 ல் போட்டியிட, அதே பகுதியை சேர்ந்த விஜியா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அதேநேரம், பனங்காட்டேரி பகுதியில் இந்த வாரம் உள்ளூர் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக கிராமப் பஞ்சாயத்து சார்பில் 1,200 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் விஜியா வரி செலுத்த சென்றுள்ளார். அப்போது கிராமப் பஞ்சாயத்து நிர்வாகியான சிவக்குமார், பணத்தை திருப்பி கொடுத்துள்ளார்.