மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சுமார் 20 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துவருகின்றன. இதையடுத்து, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், இத்திட்டத்தை கொண்டுவந்த பாஜக அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருப்பத்தூர் காங்கிரஸ் கட்சியினர் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
பாஜக அலுவலகத்தை முற்றுகையிட சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது - farmers protest
திருப்பத்தூர்: விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சி மாநில சிறுபான்மை துறை தலைவர் அஸ்லம் பாஷா உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து சென்னையிலுள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் இருசக்கர வாகனத்தில் ஏராளமான கட்சியினர் சென்னையை நோக்கி புறப்பட்டனர்.
அப்போது, காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், காவல் துறையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கைது செய்த காவல் துறையினர் தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.