திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட ஏலகிரி மலைவாழ் மக்களுக்கும் திருப்பத்தூர் ஒன்றித்துக்குள்பட்ட ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எஸ்டி இனச்சான்று வழங்காததால் தங்கள் பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக போராடிவருகின்றனர்.
இது குறித்து ஏலகிரி மலை ஜவ்வாது மலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ் மாநில காங்கிரசின் சிறுபான்மையின தலைவர் அஸ்லம் பாஷா, மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்களுடன் சென்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ஒரு வார காலத்திற்குள் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மனு கொடுத்தார்.