தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூர் அருகே மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய ஜேசிபி பறிமுதல்! - கள்ளத்தனமாக இரவுநேரத்தில் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

திருப்பத்தூர் அருகே மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய ஜேசிபியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கள்ளத்தனமாக இரவுநேரத்தில் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் பறிமுதல்
கள்ளத்தனமாக இரவுநேரத்தில் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

By

Published : Jun 26, 2022, 10:05 PM IST

Updated : Jun 26, 2022, 11:00 PM IST

திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிபட்டு பகுதியைச் சேர்ந்த வீராசாமி மகன் சண்முகம் (40). இவர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் மண் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக துணை ஆட்சியர் லட்சுமிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பெயரில் துணை ஆட்சியர் லட்சுமி மற்றும் சு.பள்ளிபட்டு கிராம நிர்வாக அலுவலர் பெருமாள் ஆகியோர் திடீரென ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அதே பகுதியில் மண் கடத்தலில் ஈடுபட்டிருந்த நபரை பிடிக்கச்சென்றபோது ஜேசிபி இயந்திரத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதன் காரணமாக கிராம நிர்வாக அலுவலர் பெருமாள் கொடுத்தப்புகாரின் பேரில் கந்திலி காவல்துறையினர் ஜேசிபி இயந்திரத்தை காவல் நிலையம் எடுத்துச்சென்றனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் கல்லூரி மாணவி இறப்பில் சந்தேகம்... போதை மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்தாரா என போலீஸ் விசாரணை!

Last Updated : Jun 26, 2022, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details