தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திரா காந்தி சிலையில் ஏணி அகற்றம்; கண்டனம் தெரிவித்து நடைபயணம் சென்ற காங்கிரசார் கைது - திருப்பத்தூர்

வாணியம்பாடி பேருந்துநிலையம் அருகே இந்திரா காந்தி சிலையில் ஏணியை அகற்றியதை கண்டித்து நடைபயணம் சென்ற காங்கிரஸ் கட்சி மாநில சிறுபான்மைத்துறை தலைவர் அஸ்லம் பாஷாவை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

இந்திரா காந்தி சிலையில் ஏணி அகற்றம்; கண்டனம் தெரிவித்து நடைபயணம் சென்ற காங்கிரசார் கைது
இந்திரா காந்தி சிலையில் ஏணி அகற்றம்; கண்டனம் தெரிவித்து நடைபயணம் சென்ற காங்கிரசார் கைது

By

Published : Jan 22, 2023, 9:30 PM IST

இந்திரா காந்தி சிலையில் ஏணி அகற்றம்; கண்டனம் தெரிவித்து நடைபயணம் சென்ற காங்கிரசார் கைது

திருப்பத்தூர்:வாணியம்பாடி பேருந்து நிலையத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க அமைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணி படிக்கட்டுகளை கடந்த 20ஆம் தேதி மர்ம நபர்கள் உடைத்து அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காங்கிரஸ் கட்சியினர் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் சாலைமறியலில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்திரா காந்தி சிலையின் ஏணி படியை அகற்றிய நபர்களை கைது செய்ய வேண்டும்; உடைக்கப்பட்ட ஏணியை சீரமைத்து மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் காங்கிரசார் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத்துறை மாநிலத் தலைவர் அஸ்லம்பாஷா வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை 25 கிலோ மீட்டர் நடந்தே சென்று மனு அளிக்க இருந்தார்.

இதற்காக இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தனது நடைபயணத்தை தொடங்கி சென்று சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு சென்ற வாணியம்பாடி டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் மற்றும் நகர காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் அஸ்லம் பாஷாவை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்று தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதையும் படிங்க: Video Leak: GH-ல் சிகிச்சைக்கு சிறுவனிடம் 100 ரூபாய் லஞ்சம் கேட்ட பெண் ஊழியரால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details