திருப்பத்தூர்:கவுண்டச்சியூரை சேர்ந்தவர் சத்தியராஜ் (28). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அருகில் உள்ள காக்கங்கரைக்கு வேலை காரணமாக சத்தியராஜ் மற்றும் அவரது அண்ணன் சிவகானந்த் ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள், சத்தியராஜ் யார் என்று கேட்டு, அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதனிடையே அருகில் இருந்த நபர்கள் வர, மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள், காயமடைந்த சத்தியராஜை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், திருப்பத்தூர் வெங்கடேஸ்வரா நகரில், வெங்களாபுரத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் சத்தியராஜ் கடந்த 2 வருடங்களுகு முன்பு வேலை செய்துள்ளார். அந்த நேரத்தில் ராச்சமங்கலத்தைச் சேர்ந்த ஜோதி மற்றும் சதீஷ் ஆகியோர் கருவில் இருக்கும் குழைந்தை ஆணா அல்லது பெண்ணா என கண்டறிந்து, பெண் குழந்தையாக இருந்தால் அதனை கருகலைப்பு செய்து வந்துள்ளனர்.