திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் (37). இந்நிலையில் இவர் மதுபோதையில், அங்குள்ள குளத்தில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அக்குளத்திலிருந்த தாமரைப் பூவை யார் பறிப்பது என, நண்பர்களுடன் போட்டியில் ஈடுபட்டுள்ளார். பிறகு தாமரைப் பூவைப் பறிக்கச் சென்ற ஆறுமுகம், எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி, நீரில் மூழ்கியுள்ளார்.
தாமரையைப் பறிக்கச் சென்ற மற்றவர்கள் கரை திரும்பியும், வெகு நேரமாக ஆறுமுகம் கரை திரும்பாமல் இருந்ததைக் கண்டு நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து ஆறுமுகத்தின் உறவினர்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.