திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்நாத் (18). சேலம் மகேந்திரா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு கோகுல்நாத்தின் தாய் குமுதவல்லி இறப்பால், படிப்பை தொடர முடியாமல் வீட்டில் இருந்து வந்தார்.
ரயில் முன் பாய்ந்து தற்கொலை
இதற்கிடையில் நேற்று (ஜூலை 16) பச்சகுப்பம் ரயில்வே மேம்பாலம் அருகே கோகுல்நாத் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர், மாணவனின் உடலை மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.